பிரதான வீதி வடிகான்கள் விரைவில் புனரமைக்கப்படும் - ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் பைறூஸ் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 26, 2025

பிரதான வீதி வடிகான்கள் விரைவில் புனரமைக்கப்படும் - ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் பைறூஸ் தெரிவிப்பு

ஓட்டமாவடி மணிக்கூட்டுக்கோபுர சந்தி தொடக்கம் மீராவோடை வரையான வீதி வடிகான்கள் விரைவில் புனரமைக்கப்டுமென கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார்.

குறித்த வடிகான் பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு வேண்டுகோளை விடுத்திருந்த நிலையில், மேற்குறித்த வீதி வடிகான் புனரமைப்பு சம்பந்தமாக சாதகமான பதில் வீதி அதிகார சபையிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

தங்கள் திணைக்களத்திற்குச் சொந்தமான ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து ஆரம்பமாகும் ஜும்ஆப் பள்ளிவாயல் வீதி மீராவோடை சந்தையூடாக கப்பல் ஹாஜியார் சந்தி, எம்.பி.சீ எஸ் வீதி வரை செல்லும் வடிகான்களின் மூடிகள் பல இடங்களில் சேதமடைந்து பயன்படுத்த முடியாதுள்ளதோடு, பல இடங்களில் மூடிகள் இல்லாது ஆபத்தான நிலையிலும் வடிகால்களில் அதிகளவான குப்பைகள் நிறைந்தும் காணப்படுகின்றது.

இது ஐந்து பள்ளிவாயல்கள், நான்கு பாடசாலைகள், வைத்தியசாலை, அரச நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், நெருக்கமான குடியிருப்பு பொதுப்போக்குவரத்து என பிரதான பாதையாகவுமுள்ளது.

மழை காலத்தில் வெள்ளநீர் வடிந்தோட முடியாமல் டெங்கு பெருக்கம் தொடர்ச்சியாக இவ்வடிகால்களில் அடையாளப்படுத்தப்படுவதோடு, பாதசாரிகள், பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள், வர்த்தகர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இவ்வடிகான்கள் இதுவரை பிரதேச சபையினால் தூர்வாரி துப்பரவு செய்யப்பட்டு வருவதோடு, கணிசமான எண்ணிக்கையிலான மூடிகளும் இடப்பட்டுள்ளன.

இவ்வடிகான்களின் சீரான பயன்பாட்டினையும், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பினையும் பேணத்தக்கதாக சிதைவடைந்துள்ள வடிகால் மூடிகளை திருத்தம் செய்து அவசியமான இடங்களில் மூடிகளிட்டு தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே வீதி அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தினால் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறுகியகால வேண்டுகோளையேற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய நிறைவேற்றுப் பொறியியலாளர் எஸ்.கிரிசாந்தனுக்கும், அதிகாரிகளுக்கும் தவிசாளர் நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment