கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் கடலில் மாயமாகிய சம்பவம் ஒன்று நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கொக்கிளாய் கடலிற்கு நேற்று (25) அதிகாலை 4.30 மணியளவில் கடற்தொழிலுக்கு 5 பேர் சென்ற நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளார்.
தொழிலுக்கு போய் கடலில் இறங்கியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் தற்போது வரை கிராம மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து தொழிலினை மேற்கொண்டுவரும் 23 வயதான பொன்னம்பெருமகே ஜெகான் நதிஅருண் என்னும் இளைஞனே மாயமாகியுள்ளார்.
குறித்த இளைஞன் தொடர்பாக கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்தும் இதுவரை அவ்விடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என்று காணாமல்போன இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணாமல்போன இளைஞனின் படம் வீட்டில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment