ஹஜ் யாத்திரை செய்ய விரும்புவோர் திணைக்களத்தில் பதிவை மேற்கொள்ளலாம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 13, 2025

ஹஜ் யாத்திரை செய்ய விரும்புவோர் திணைக்களத்தில் பதிவை மேற்கொள்ளலாம்

எதிர்­வரும் 2026 ஆம் ஆண்டு மேற்­கொள்­ள­வுள்ள புனித ஹஜ் கடமைக்கான பணி­களை அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­யன இணைந்து ஆரம்பித்துள்­ள­தாக ஹஜ் குழுவின் உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரிவித்தார்.

அடுத்த வருட ஹஜ்­ஜிற்­கான பணி­களை சவூதி அரே­பிய அர­சாங்கம் தற்­போது ஆரம்­பித்­துள்­ளது. அதற்கு சமாந்­த­ர­மாக இலங்­கை­யிலும் ஹஜ் கட­மைக்­கான பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்பிட்டார்.

இதன் ஊடாக இறுதிக் கட்­டத்தில் ஏற்­ப­டு­கின்ற தேவை­யற்ற பிரச்சினை­களை தவிர்க்க முடியும் என அவர் நம்­பிக்கை வெளியிட்டார்.

இதற்­க­மைய 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் கட­மை­யினை நிறைவேற்ற உத்­தே­சித்­துள்­ள­வர்கள் தங்­களை பதி­வு­செய்­து கொள்ளு­மாறு அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்­களம் ஆகி­யன இணைந்து வேண்டுகோள் விடுத்­துள்­ளன.

திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தின் ஊடாக இந்த பதி­வினை மேற்­கொள்­வ­துடன், பதி­வு­ கட்­ட­ண­மாக மீளளிக்கப்ப­டாத 5,000 ரூபா­வினை 2327593 எனும் இலங்கை வங்­கியின் ஹைட் பார்க் கிளை­யி­லுள்ள திணைக்­க­ளத்தின் ஹஜ் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்­யு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

வைப்­பி­லிட்­ட­மைக்­கான பற்­றுச்­சீட்­டினை திணைக்­க­ளத்­திற்கு சமர்ப்­பித்து அடுத்த வரு­டத்­திற்­கான ஹஜ் பய­ணத்­தினை உறுதி செய்­யு­மாறும் யாத்­தி­ரீ­கர்­க­ளிடம் வேண்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக இது­வரை திணைக்­க­ளத்தில் பதி­வு­ செய்­யப்­பட்­டுள்ள அனைத்து பதி­வு­களும் ரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, கடந்த ஜுன் மாதம் புனித ஹஜ் கட­மை­யினை நிறைவேற்­றிய ஹாஜி­க­ளிடம் தாங்கள் பய­ணித்த முகவர் நிறுவனங்கள் தொடர்பில் ஏதா­வது முறைப்­பா­டுகள் இருப்பின் தகுந்த ஆதா­ரத்­துடன் சமர்ப்­பிக்­கு­மாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் இந்த முறைப்பாடுகளை நேரடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவே சமர்ப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment