பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டார் நிலந்த ஜெயவர்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, July 19, 2025

பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டார் நிலந்த ஜெயவர்தன

அரச புலனாய்வு துறையின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இந்த தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு நேற்று (18) எடுத்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் பெறப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக நிலந்த ஜெயவர்தன குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதன் தலைவர் லலித் ஏகநாயக்க தலைமையில் நேற்று (18) பொலிஸ் ஆணைக்குழு கூடியபோது நிலந்த ஜெயவர்தனவை சேவையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிகப்பட்டது.

நிலந்த ஜெயவர்தனவை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் பணிப்புரையை பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளது.

நிலந்த ஜெயவர்தன தனது கடமையை புறக்கணித்ததாகவும், குற்றவியல் குற்றத்தைச் செய்ததாகவும் உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்புகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைத்திருந்தது. 

அதன்படி, நிலந்த ஜெயவர்தன, மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, அவர் செய்த குற்றச் செயலுக்காக வழக்கு தொடரப்பட வேண்டும் என்று பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment