செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவன் ஒருவனின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்புக்கூட்டு தொகுதியுடன் 4 எலும்பு கூட்டு தொகுதி இன்று (02) அகழ்ந்து எடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஏழாம் நாள் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் பின்னி பிணைந்து குழப்பகாரமான முறையில் காணப்படுவதனால் அவற்றினை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதேவேளை , இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வு பணிகளின்போது, மேலும் 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் இதுவரையில் சிறுவர்களுடைய எலும்புக்கூட்டு தொகுதி உட்பட 38 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட ஏனைய எலும்புக்கூட்டு தொகுதிகளை அகழ்ந்து எடுக்கப்படும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை பேராசிரியர் ராஜ் சோமதேவாவால், செய்மதி படங்கள் மூலம் சந்தேகத்திற்குரிய பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன் சந்தேகத்திற்கு உரிய இடமாக அடையாளப்படுத்தப்பட்ட ஏனைய இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவற்றை துப்பரவு செய்யும் பணிகளும் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 6ஆம் நாள் பணிகள் நேற்று (01) முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்புக்கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது
பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment