அதிவேக, இணையத்தள சேவையான ஸ்டார்லிங் (Starlink) இணைய சேவை தற்போது இலங்கையில் கிடைப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
Starlink நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பை மேற்கோள்காட்டி, அதன் நிறுவுனரான எலோன் மஸ்க் தனது உத்தியோகபூர்வ X (Twitter) கணக்கில் இன்று (02) இதனை அறிவித்துள்ளார்.
அதற்கமைய, செய்மதி ஊடான ஸ்டார்லிங் அதிவேக, குறைந்த தாமதம் கொண்ட இணைய சேவையை இலங்கையிலுள்ள பயனாளர்கள் தற்போது பதிவுசெய்து பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங் மூலம், நகர்ப்புறங்கள், கிராமப் புறங்கள் எனும் வேறுபாடுகளின்றி ஒரே தரத்தில் இணைய சேவையை பெற முடியும் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகக்குறைந்த மாதாந்த கட்டணமாக ரூ. 12,000 எனும் விலையில் கிடைக்கும் இந்த சேவைக்கு, உபகரணத்திற்கு ரூ. 118,000 மற்றும் அதனை விநியோகிப்பதற்கான கட்டணமாக ரூ. 5,820 உள்ளிட்ட ரூ. 123,820 செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு starlink.com/srilanka
No comments:
Post a Comment