மஹியங்கனை கால்வாயினுள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் : 2 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 15, 2025

மஹியங்கனை கால்வாயினுள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் : 2 பேர் பலி

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை, மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாபாகடவெவ பொலிஸ் பயிற்சி பாடசாலை அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து கவிழ்ந்த காரை மீட்டனர்.

காரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அம்பியூலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், அனுமதிக்கப்பட்டபோது இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

விபத்துக்குள்ளான காரில் பயணித்த இருவரும் மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment