ஒளிமயமாக அலங்கரிக்கப்பட்ட பாராளுமன்றக் கட்டடத்தொகுதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

ஒளிமயமாக அலங்கரிக்கப்பட்ட பாராளுமன்றக் கட்டடத்தொகுதி

இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றக் கட்டடத் தொகுதி, தியவன்னா ஓயா உள்ளிட்ட வளாகம் வெசாக் அலங்காரங்கள் மற்றும் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டது.

சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலாளர் குழுவின் வழிகாட்டலில் பாராளுமன்ற இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவுகள், பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் மற்றும் இலங்கை இராணுவம் இதற்கான பங்களிப்பை வழங்கியிருந்தன.

இதேவேளை, இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை பாராளுமன்றத்தினால் பாராளுமன்ற வளாகத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தியவன்னா பௌத்த பக்தி கீதம் நிகழ்வு’ எதிர்வரும் 2025.05.16 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அன்றையதினம் பி.ப. 6.00 மணி முதல் 7.30 மணி வரை இடம்பெறவுள்ளது. 

பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர  கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் 'தியவன்னா வெசாக் பௌத்த பக்தி கீதம்' நிகழ்வு, பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் ஒன்றிணைந்த சேவை பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளும் கலைஞர்களால் முன்வைக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment