தேசபந்து தென்னக்கோனை விசாரணைக்குழு முன் ஆஜராகுமாறு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 8, 2025

தேசபந்து தென்னக்கோனை விசாரணைக்குழு முன் ஆஜராகுமாறு அறிவிப்பு

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை மே மாதம் 19ஆம் திகதி விசாரணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை மே மாதம் 19ஆம் திகதி ‘பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு’ முன்னிலையில் ஆஜராகுமாறு குறித்த குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இதுவரை பல நாட்கள் கூடியிருந்ததுடன், எதிர்கால விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் தேசபந்து தென்னக்கோனை குழு முன்னிலையில் ஆஜராகுமாறு முதல் தடவையாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment