இலங்கையில் தலசீமியா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! - News View

About Us

About Us

Breaking

Friday, May 9, 2025

இலங்கையில் தலசீமியா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் தலசீமியா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரச சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குட்பட்ட தொற்றற்ற நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.

உலக தலசீமியா தினத்தையொட்டி வியாழக்கிழமை (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தலசீமியா நோய் என்பது, குருதிவளிக்காவியின் உருவாக்கத்தில் குறைபாடு ஏற்படும் மரபணு சார்ந்த குருதி நோய் ஒன்றாகும்.

இந்த நோயால் ஏற்கனவே ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நூற்றுக்கணக்கானோர் தாங்கள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆண்டுக்கு 40 முதல் 50 குழந்தைகள் தலசீமியா நோயுடன் பிறக்கின்றனர்.

நாட்டில் சுமார் 5 இலட்சம் பேர் தலசீமியா நோய் காரணமான தங்களுக்குத் தெரியாமலேயே மரபணு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த நோயின் பரவலைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment