நாட்டுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 1,74,608 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பபடி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை விட 17.3 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக 8,96,884 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இது நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு சிறந்த எடுத்து காட்டாகுவம், சர்வதேச சுற்றுலா சந்தையில் இலங்கையின் மீள் எழுசிக்கு உறுதியான அடையாளமாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர். குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 38,744 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அடுத்தப்படியாக பிரித்தானியா (17,348), ரஷ்யா (13,525) மற்றும் ஜேர்மன் (11,654) போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்புக்கு பாதுகாப்பு சூழல், சிறந்த போக்குவரத்து வசதிகள் மற்றும் சர்வதேச விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகள் போன்றன முக்கிய பங்காற்றியுள்ளதாகவும், இந்த வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment