பாதுகாப்பு வழங்குமாறு கோரிய தேசபந்து : உயிர் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அறிவிப்பு - News View

About Us

Add+Banner

Friday, May 2, 2025

demo-image

பாதுகாப்பு வழங்குமாறு கோரிய தேசபந்து : உயிர் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அறிவிப்பு

Senior-DIG-Deshabandu-Tennakoon-
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் கஞ்சிபானை இம்ரானிடமிருந்து அச்சுறுத்தல் காணப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இவ்வாறான சூழலில் தனது பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *