மே 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் சேவைகள் இடம்பெறாது என ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
மே 06ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் காரணமாக, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சூரியப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இடம்பெறாது என அவர் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment