ஓட்டமாவடி பிரதேசத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை எமக்கு தாருங்கள் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

Add+Banner

Thursday, April 17, 2025

demo-image

ஓட்டமாவடி பிரதேசத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை எமக்கு தாருங்கள் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

491404987_1190976695733695_3384369640973366640_n%20(Custom)
ஓட்டமாவடி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் சிந்தித்து வாக்களித்து ஒன்பது வட்டாரங்களையும் வெற்றி பெறவைத்து, சபையை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருங்கள் என கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் மீராவோடை மேற்கு வேட்பாளர் ஐ.எம். றிஸ்வினை ஆதரித்து பிரச்சார கூட்டம் நேற்று (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.

அவர் இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு, சகல அதிகாரங்களையும் கொண்டு நாங்கள் உங்கள் பிரதேசத்தை கட்யெழுப்புவோம். அதற்கான முழுமையான சந்தர்ப்பத்தையும் எமக்கு தாருங்கள் என அவரது உரையில் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் முதலாம் வட்டார வேட்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஓட்டமாவடி பிரதேச மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *