ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மத்திய வங்கி அறிக்கைகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 29, 2025

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மத்திய வங்கி அறிக்கைகள்

2024 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.

அறிக்கையின் பிரதியொன்றை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடமும் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment