கிழக்கில் இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத குழு தொடர்பில் தகவல் கிடைப்பு - அமைச்சரவை பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

கிழக்கில் இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத குழு தொடர்பில் தகவல் கிடைப்பு - அமைச்சரவை பேச்சாளர்

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவொன்று செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் (04.03.2025) இடம்பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் அவர் மேற்கண்டவறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த அடிப்படைவாத குழு குறித்து மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

இந்த தீவிரவாதக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் கல்முனை பகுதியிலேயே இந்த அமைப்பின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. இந்த பகுதியிலேயே அந்த அமைப்பு உருவாகியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment