யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் ! ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிஆதரவு - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2025

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் ! ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிஆதரவு

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று கூட்டணியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று திங்கட்கிழமை (10) நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக நடத்தப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும். அது உண்மையில் உடைக்கப்பட வேண்டிய விடயம்.

வட, கிழக்கில் பிக்குகள் மற்றும் சில திணைக்களங்கள் நினைத்ததை செய்யும் ஒரு நிலை காணப்படுகிறது. 

எனவே இந்த விகாரை உடைக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கான ஆதரவை நாங்கள் வழங்குவோம். மக்களுடைய விருப்பமும் அதுவே என்றார்.

No comments:

Post a Comment