இராணுவ ஊடக பணிப்பாளராக பிரிகேடியர் வருண கமகே கடமையேற்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2025

இராணுவ ஊடக பணிப்பாளராக பிரிகேடியர் வருண கமகே கடமையேற்பு

இலங்கை இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பணிப்பாளராக பிரிகேடியர் வருண கமகே கடமை இன்று (05) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இராணுவ ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான பிரிகேடியர் வருண கமகே, 1993 ஆம் ஆண்டு மே  மாதம் 05ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.

அடிப்படை இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த அவர், இலங்கை பொறியியல் படையணியில் இரண்டாம் லெப்டினன் ஆக நியமிக்கப்பட்டார்.

அவர் இலங்கை பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டம் பெற்றவராவார். பொது நிர்வாகம் மற்றும் வணிக முகாமைத்துவ முதுகலை பட்டபடிப்புகளையும் நிறைவு செய்துள்ள அவர், தற்போது தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்ட கற்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

வெளிநாடுகளிலும் இலங்கையிலும் பல தொழில்முறை கற்கைகளைப் பின்பற்றியுள்ள பிரிகேடியர் வருண கட்டளை, பணிநிலை மற்றும் செயல்பாட்டு முகாமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு விசேட பயிற்சித் திட்டங்களை பூர்த்தி செய்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்குள் பல்வேறு முக்கிய நியமனங்களில் பணியாற்றியுள்ள அவர், கட்டளை, பணிநிலை மற்றும் பயிற்றுவிப்பாளர் கடமைகளில் தனது திறன்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை இராணுவத்தில் அவர் வெளிக்காட்டிய விசேடத்துவங்கள் மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளுக்காக பல்வேறு பதக்கங்களை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

திருமணமான அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

No comments:

Post a Comment