முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 12, 2025

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை (10) தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment