தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2025

தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள்

தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் இயோலை கைது செய்யும் நடவடிக்கையில் தென் கொரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி இன்று (03) அதிகாலை 4.30 அளவில் சுமார் 30 தென் கொரிய புலனாய்வு அதிகாரிகள் ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள கட்டடத் தொகுதிக்குள் நுழைந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக நின்ற இராணுவக் குழுவினர் அவரைக் கைது செய்ய வந்த அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாக Yonhap செய்தி நிறுவனம் செய்தி வௌியிட்டுள்ளது.

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பில் வீட்டில் தங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் ஆதரவாளர்களும் ஊடகவியலாளர்களும் அவரது இல்லத்திற்கு முன்பாக குவிந்துள்ளனர்.

இல்லத்தின் முன்பாகவுள்ள வீதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிடியாணை உத்தரவை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் இந்த பிடியாணை சட்டவிரோதமானது எனவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment