தரம் ஐந்து புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான (2024) மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
நாளை 27 முதல் பெப்ரவரி 06ஆம் திகதி வரை இதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் வெளியாகின.
பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசித்து பார்வையிட முடியும்.
புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வதற்காக 20,000 பேர் விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், விசேட தேவையுடைய 250 விண்ணப்பதாரிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, User Name மற்றும் Password என்பவற்றைக் கொண்டு, பாடசாலை பரீட்சை பெறுபேறு ஆவணத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படுமிடத்து, 1911 அல்லது பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் 0112784208/ 0112784537/ 0112786616/ 0112785922 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment