சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்.
சீன - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் நாடு திரும்பினார்.
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனவரி மாதம் 14 முதல் 17 வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment