சீனா செல்லும் ரில்வின் சில்வா : இரு தரப்பு அரசியல் ஒப்பந்தம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2025

சீனா செல்லும் ரில்வின் சில்வா : இரு தரப்பு அரசியல் ஒப்பந்தம்

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையிலான உத்தேச இரு தரப்பு அரசியல் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த விஜயத்திற்கான திகதி இன்னும் நிறைவுபடுத்தப்படாத நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாத்திற்கு முன்னர் இந்த விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின்போது 15 ஒப்பந்தங்கள் வரை நிறைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் யாவும் இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விடயங்களாகும்.

எனினும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று குறித்தும் இந்த விஜயத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் ரீதியிலான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் உள்ளடங்களாக இரு கட்சிக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment