முன்னாள் சுகாதார அமைச்சரின் குடும்பத்தாரின் மீதான தடையுத்தரவு மேலும் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2025

முன்னாள் சுகாதார அமைச்சரின் குடும்பத்தாரின் மீதான தடையுத்தரவு மேலும் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கை நடைமுறைகளை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களின் ரூ. 97 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான வங்கி நிலையான வைப்புக்கள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு இன்றுடன் காலாவதியாகவிருந்த நிலையில், அதனை மேலும் நீடிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம், உரிய உத்தரவை ஏப்ரல் 2ஆம் திகதி வரை நீடிக்க உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment