‘வெலே சுதா’ எனப்படும் சமந்த குமார, அவரது மனைவி உள்ளிட்ட 2 பெண்களுக்கு தலா 8 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத சொத்துக்களை குவித்ததற்காக, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலே சுதா’ எனப்படும் சமந்த குமார, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணை பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) இத்தீர்ப்வை வழங்கியது.
குறித்த குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம், சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment