ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்ட60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள் ! கட்டுநாயக்கவில் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்ட60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள் ! கட்டுநாயக்கவில் இருவர் கைது

60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களை ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த இருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 46 வயதுயைட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இந்தியாவின் புது டில்லியிலிருந்து இன்றையதினம் காலை 10.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர், சந்தேகநபர்கள் இருவரும், விமான நிலையத்தின் (Green Channel) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களின் ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 மாணிக்கக் கற்களை, சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சுங்க அதிகாரிகள் அவர்களிடம் இருந்து 300 கெரட் எடையுள்ள 'புஷ்பராக' மற்றும் 'நில்குருவிந்த' வகையைச் சேர்ந்த 54 இரத்தினக் கற்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் திலினி பீரிஸின் அறிவுறுத்தலின் பேரில், விமான நிலைய துணை சுங்கப் பணிப்பாளர் ரோஹன் பெர்னாண்டோவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment