விவசாயிகளுக்கு மானியமாக 25,000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை - பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 9, 2025

விவசாயிகளுக்கு மானியமாக 25,000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை - பிரதமர்

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25,000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கென உர மானியத்தை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் புதன்கிழமை (08) பாராளுமன்ற விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஒவ்வொரு மாவட்டத்திற்குமென உர மானியத்தை வழங்குவதற்கான கால எல்லை 2024 ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 2025 பெப்ரவரி முதலாம் திகதி வரையாகும்.

இதற்கென 25000 ரூபா உர மானியம், 15,000 ரூபா மற்றும் 10,000 ரூபா என்ற தவணை அடிப்படையில் இரு கட்டங்களாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 15,000 ரூபா முதல் தவணை வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக சாதகமான மற்றும் உரிய செயன்முறையை முன்னெடுப்பதற்கு எமது அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கென விவசாய அமைப்புகளிடமிருந்து கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையும் இடம்பெறுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

வயல் காணிகளில் நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கென வழங்கப்படும் நிதி நிவாரணத்திற்கு மேலதிகமாக 25,000 தசம் ஏழு மூன்று மெட்ரிக் தொன் அளவிலான மியுரியேட் ஒப் பொடேஷ் உரத்தை அரசினால்; இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment