சிறார்களை விளம்பரத்திற்கு பயன்படுத்த தடை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 7, 2024

சிறார்களை விளம்பரத்திற்கு பயன்படுத்த தடை

விளம்பர நோக்கங்களுக்காக 12 வயதுக்குட்பட்ட சிறார்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை அரசாங்கம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.

12 வயதுக்குட்பட்ட சிறார்களை விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்துவது அடுத்த வருடம் முதல் தடை செய்யப்படுவதாக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜேமுனி அறிவித்துள்ளார்.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 12 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியர் விளம்பர பிரசார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படுவதனை நாம் ஜனவரி மாதம் முதலாம் திகதியுடன் நிறுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் கடந்த 7 - 8 ஆண்டுகளாகவே இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்த காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நடைமுறையை எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம் அறிமுகம் செய்வதாக நேற்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அசங்க விஜேமுனி தெரிவித்தார்.

No comments:

Post a Comment