டிக்கெட் தொகை ரூபா 5.38 கோடியை திரும்ப வழங்குகிறது அவுஸ்திரேலிய வாரியம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 15, 2024

டிக்கெட் தொகை ரூபா 5.38 கோடியை திரும்ப வழங்குகிறது அவுஸ்திரேலிய வாரியம்

இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று (14) பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் தொடங்கியது.

ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

இந்த போட்டியை காண்பதற்காக 30,145 பேர் டிக்கெட் வாங்கியிருந்தனர். 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளின்படி டெஸ்ட் போட்டியின் தினத்தில் குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வீசப்படாவிட்டால் இரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை 100 சதவீதம் திருப்பி வழங்க வேண்டும்.

இதன்படி 30,145 இரசிகர்களுக்கும் டிக்கெட்டின் முழுத் தொகை திரும்ப வழங்கப்படும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சுமார் ரூ.5.38 கோடியை திரும்ப வழங்க உள்ளது. 

மோசமான வானிலையால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் போட்டிகளை காப்பீடு செய்துள்ளது.

No comments:

Post a Comment