பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 12, 2024

பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்றும் (12) நாளையும் (13) இலங்கை போக்குவரத்து சபை விசேட பஸ் சேவையை நடத்தவுள்ளதாக அதன் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தலுக்காக தூரப் பிரதேசங்களுக்கு செல்லும் மக்களுக்காக தினசரி ரயில் பயணங்களுக்கு மேலதிக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் என்.ஜே. இடிபொல அறிவித்தார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை தேர்தல் சேவைகளுக்காக பயன்படுத்துவதால் நாளை வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment