கண்டியில் போலி இலக்கத் தகடுகளுடன் மீட்கப்பட்ட இரண்டு வாகனங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 13, 2024

கண்டியில் போலி இலக்கத் தகடுகளுடன் மீட்கப்பட்ட இரண்டு வாகனங்கள்

கண்டியில் இரு வெவ்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கண்டி - அஸ்கிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த ஜீப் வாகனத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கண்டி - கட்டுகெலே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment