அடுத்த மாதம் முதல் வழமைக்கு திரும்பும் - குடிவரவு, குடியகல்வு திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2024

அடுத்த மாதம் முதல் வழமைக்கு திரும்பும் - குடிவரவு, குடியகல்வு திணைக்களம்

எதிர்வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வெற்று கடவுச்சீட்டுகள் கிடைக்கவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முறையான நிகழ்நிலை முறைமை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனுகோரல் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 'P' பிரிவின் கீழ் 50,000 வெற்று கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளது.

இந்த தொகைக்கு மேலதிகமாக இந்த மாதம் நடுப்பகுதியில் மேலும் 100,000 வெற்றுக் கடவுச்சீட்டுக்களும், டிசம்பர் மாதம் மேலும் 150,000 வெற்றுக் கடவுச்சீட்டுக்களும்  கிடைக்கப் பெறவுள்ளன. அத்துடன் 750,000 வெற்றுக் கடவுச்சீட்டுக்கள் எதிர்வரும் மாதமளவில் கிடைக்கப் பெறவுள்ளன.

அத்துடன் மேலதிகமாக வெற்றுக் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கான பெறுகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 1600 கடவுச்சீட்டுக்கள் விண்ணப்பதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நிலையில், இந்த தொகையை எதிர்வரும் மாதம் முதல் அதிகரிப்பதற்கான இயலுமை காணப்படுகிறது.

முறையான வழிமுறைக்கு அமைய நிகழ்நிலை முறைமை ஊடாக விண்ணப்பதார்கள் சேவையை பெற்றுக் கொள்வதற்கு நேரம் மற்றும் திகதியை ஒதுக்கிக் கொள்வதற்கு தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment