தேசியப்பட்டியல் உறுப்பினராக முத்து முஹம்மது - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 19, 2024

தேசியப்பட்டியல் உறுப்பினராக முத்து முஹம்மது

வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக மேலும் ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெற்றுள்ளது.

அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரான முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது என்பவருக்கே குறித்த தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசானது இம்முறை பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டதுடன், வன்னி உட்பட ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தது.

அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்ற ஐந்து தேசியப்பட்டியல் ஆசனத்தில் ஒன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்குவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் முக்கியஸ்தருமான முஹம்மது இஸ்மாயில் முத்து முகம்மது என்பவருக்கு குறித்த பிரதிநித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இவரது நியமனத்துடன் வன்னி மாவட்டம் 9 பாராளுமன்ற பிரதிநித்துவங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment