கண்டியில் கைப்பற்றப்பட்ட மற்றொரு வாகனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 10, 2024

கண்டியில் கைப்பற்றப்பட்ட மற்றொரு வாகனம்

கண்டி பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் ரக வாகனமொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வாகனத்தை சோதனை செய்ததில், அது பதிவு செய்யப்படவில்லை என்பதும், செசி மற்றும், என்ஜின் இலக்கங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த ஜீப் ரக வாகனம் சட்டவிரோதமான முறையில் உதிரிப்பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளரும் போலீஸாரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயஸ்ரீ உயன பல்லேகல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment