இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்சியாளராக நீல் மெக்கென்சி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 12, 2024

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்சியாளராக நீல் மெக்கென்சி நியமனம்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நீல் மெக்கென்சி இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரரான நீல் மெக்கன்சி குறித்த பதவியில் ஒரு குறுகிய காலத்திற்கு செயற்படுவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க நேற்றிரவு தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்ட இலங்கை வீரர்கள் குழுவுடன் இணைந்து அவர் பணியாற்றவுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக 5,000 சர்வதேச ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் நீல் மெக்கென்சி, நவம்பர் 13 – 21 வரை இலங்கை வீரர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

குறித்த டெஸ்ட் தொடரானது 2023- 2025 இற்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு பகுதி என்பதோடு, இது உலக டெஸ்ட் கிரிக்கெட் கிண்ண (WTC) இறுதிப் போட்டிக்கான தெரிவில் இணைந்திருப்பதற்கு இலங்கைக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைகிறது.

No comments:

Post a Comment