பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சனல் 4 காணொளி வெளியீடு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதமானது இன்று (12) சிவநேசதுரை சந்திரகாந்தனால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (12) குற்றப் புலனாய்வு திணைக்கிளத்திற்கு தன்னால் சமூகளிக்க முடியாமை தொடர்பிலும் அதற்கான காரணம் குறித்தும் மேற்படி கடிதம் சிவநேசதுரை சந்திரகாந்தனால் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன்னால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றையதினம் வர முடியாது எனவும், அதற்கு மாறாக எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒரு திகதியை ஒதுக்கினால் தன்னால் வர முடியும் எனவும் பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டமை தொடர்பாக கடந்த ஆண்டு சனல் 4 ஆவணப்படத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பிரித்தானிய சனலுக்கு ஆசாத் மௌலானா வழங்கிய அறிக்கைகளைக் குறிப்பிட்டு, பொது பாதுகாப்பு அமைச்சில் அமைப்பு ஒன்று தாக்கல் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆவணப்படத்தின் கூற்றுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றையதினம் (12) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
குறித்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியிருந்தார்.
No comments:
Post a Comment