வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவு : கிடைக்காதோர் செய்ய வேண்டியது என்ன ? - தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 10, 2024

வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவு : கிடைக்காதோர் செய்ய வேண்டியது என்ன ? - தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்‌ தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகளை உரிய வீடுகளுக்கு அஞ்சலில்‌ விநியோகிக்கும்‌ பணிகள்‌ கடந்த வியாழக்கிழமையுடன் (07) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகள்‌ கிடைக்காத வாக்காளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ 14 ஆம்‌ திகதி வரை அலுவலக நேரத்தில்‌ அவர்கள்‌ தேருநர்‌ இடாப்பில்‌ பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச அஞ்சல்‌ அலுவலகத்திற்குச்‌ சென்று தமது ஆளடையாளத்தை வெளிப்படுத்தி தமது வீட்டுக்குரிய உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகளைப்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌.

உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டையொன்று கிடைக்காத வாக்காளர்களுக்கு பின்வரும்‌ நடவடிக்கைகளைப்‌ பின்பற்றுவதன்‌ மூலம்‌ உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டையின்‌ பிரதியொன்றை நிகழ்நிலை (Online) ஊடாக பெற்றுக்‌ கொள்வதற்கு தேர்தல்‌ ஆணைக்குழுவினால்‌ வசதி செய்யப்பட்டுள்ளது.

eservices.elections.sov.lk என்ற தேர்தல்‌ இ-சேவை இணையத்தளத்தினுள்‌ பிரிவேசித்தல்‌.

அதிலுள்ள குடிமக்களுக்கு என்பதனுள்‌ இருக்கும்‌ தேருநர்‌ பதிவு விபரம்‌ தேடல்‌ என்ற இ-சேவையினுள்‌ பிரவேசித்தல்‌.

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு தகவல்களைத்‌ தேடுதல்‌.

அதன்‌ துணையுடன்‌ கிடைக்கின்ற தகவல்களில்‌ தேர்தல்‌ நடவடிக்கைகளுக்கான தேருநர்‌ பதிவு விபரம்‌ - பாராளுமன்றத்‌ தேர்தல்‌ 2024 என்பதனுள்‌ பிரவேசித்தல்‌.

அப்போது 2024 பாராளுமன்றத்‌ தேர்தலுக்காக பயன்படுத்தப்படும்‌ இடாப்பில்‌ உமது தேருநர்‌ இடாப்பு பதிவுத்‌ தகவல்களைக்‌ காண்பீர்‌.

அதற்குக்‌ கீழ்‌ உமது கையடக்கத்‌ தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு வாக்காளர்‌ அட்டை அச்சிடு என்பதன்‌ மூலம்‌ உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டையை பதிவிறக்கம்‌ செய்ய முற்படூதல்‌,

அதனோடு உமது கையடக்கத்‌ தொலைபேசிக்கு குறியீடொன்று (OTP) கிடைக்கும்‌. “Enter the code” என்று தோன்றும்‌ இடத்தில்‌ அக்குறியீட்டை உள்ளிட்டு உமது உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டையை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள முடியும்‌.

வாக்காளர்கள்‌ வாக்களிப்பதற்கு உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டை இருப்பது கட்டாயமானதல்ல என்பதோடு, 2024 தேருநர்‌ இடாப்பில்‌ பெயர்‌ குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியான அடையாள அட்டையொன்றை வைத்திருக்கின்ற வாக்காளர்‌ எவரும்‌ தனக்கு குறித்தொதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்திற்குச்‌ சென்று தனது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது போதுமானது என்று மேலும்‌ அறிவித்தல்‌ கொடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment