விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 12, 2024

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் பின்வருமாறு;

வாக்கெடுப்பு நிலையத்தினுள் தங்களது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல சட்ட ரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வரத் தேவையான போக்குவரத்து வசதிகளை தங்களது தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

வாக்கெடுப்பு நடைபெறுகின்ற கட்டிடத்தின் தூரம் 100 மீற்றருக்கும் அதிகமாக இருப்பின் வாக்கெடுப்பு நிலையத்திற்கு முச்சக்கர வண்டியில் செல்ல முடியும்.

வாக்கை அடையாளமிட முடியாதவர்களுக்கு வாக்குச் சீட்டிற்கு வழிகாட்டும் தொடுகை சட்டகம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்தல்.

தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குச் செல்லுபடியான அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க முடிந்தமை.

வாக்கெடுப்பு நிலையத்தின் வளாகத்தில் காட்சிப்படுத்தப்படுகின்ற அறிவித்தல்களை சைகை மொழி மூலமான உருவப் படங்களுடன் காட்சிப்படுத்தல்.

தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகளை வெளியிடும்போது சைகை மொழி பெயர்ப்புடன் வெளியிடல் போன்ற விடயங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் பொதுத் தேர்தல் நாளைமறுதினம் (14) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment