நல்லிணக்கத்துக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் : புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான பலம் அரசுக்குள்ளது - பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 16, 2024

நல்லிணக்கத்துக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் : புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான பலம் அரசுக்குள்ளது - பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர்

வடக்கு மக்கள் நல்லிணக்கத்துக்கான தமிழ் மக்களின் நீண்டகால துயரங்களுக்கு தீர்வு காண்பதை நோக்கி செல்வது ஆகியவற்றுக்கான தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர், அரசியல் தீர்வு உட்பட நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருக்கின்ற தமிழ் மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி முயலவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் வயருக்கு கருத்து தெரிவிக்கையில், இதனை குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசமைப்பை கொண்டுவருவதற்கான பலம் அவர்களிடம் உள்ளது. ஆனால் அதற்கான அரசியல் உறுதிப்பாடு அவர்களிடம் உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி ஏனென்றால் முதல் தடவை தேசிய கட்சியொன்று இலங்கையில் இவ்வாறானதொரு பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

ஆகவே இது நிச்சயமாக நல்லிணக்கத்துக்கான தமிழ் மக்களின் நீண்டகால துயரங்களுக்கு தீர்வு காண்பதை நோக்கி செல்வது ஆகியவற்றுக்கான தெளிவான ஆணை. ஆகவே மக்கள் பெருமளவில் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆகவே அரசாங்கத்தினால் இனி என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும்.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டவேளை குறிப்பாக நிலங்கள் குறித்த விடயத்திற்கு தீர்வு காண்பேன் என தெரிவித்தார். இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலங்கள் பல அரச திணைக்களங்களால் கைப்பற்றப்பட்டுள்ள நிலங்கள் சமீப காலங்களில் தொல்பொருள் வன திணைக்களம்.

ஆகவே இந்த வாக்குறுதியை நிறைவேற்றி பெருமளவு நிலங்களை விடுவிப்பதே முதல் நடவடிக்கையாக அமையும் என எதிர்பார்க்கின்றேன்.

இதனை தவிர யுத்தம் முடிவிற்கு வந்த காலம் முதல் பல விடயங்கள் தீர்வு காணப்படாத நிலையில் நீடிக்கின்றன. இவற்றிற்கு ஜனாதிபதியும் அவரது கட்சியினரும் தீர்வு காண முயல வேண்டும்.

அரசியல் தீர்வினையும் இதில் உள்ளடக்க வேண்டும் என நான் தெரிவிப்பேன். அரசியல் தீர்வு குறித்து இலங்கையில் பெரும் விவாதங்கள் காணப்பட்டன. இலங்கை இந்திய உடன்படிக்கை - அதன் பின்னர், புது வழிமுறைகள் சிறந்த வகையிலான அதிகாரப்பகிர்வுகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

தற்போது தேசிய மக்கள் சக்தி என்ன செய்யுமென்றால் பாரிய அரசியல் அமைப்பு மாற்றங்களை முன்னெடுப்பதற்கான மூன்றில் இரண்டு அவர்களிடம் உள்ளது.

புதிய அரசமைப்பை கொண்டுவருவதற்கான பலம் அவர்களிடம் உள்ளது, ஆனால் அதற்கான அரசியல் உறுதிப்பாடு அவர்களிடம் உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாக வடக்கினை தமிழ் தேசியவாத அரசியல் ஆக்கிரமித்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள் அவர்களின் பின்னர், இவர்கள் தொடர்ந்தார்கள் ஆனால் இவர்கள் மக்களுடன் தொடர்புபட்டிருக்கவில்லை நெருக்கமாகயிருக்கவில்லை.

அவர்களில் பலர் விடுதலைப் புலிகளின் சுலோகங்களை வழிமுறைகளை தொடர்ந்தார்கள் அவர்களிற்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு காணப்பட்டது.

அவர்கள் தங்களை புதுடில்லி உட்பட உலக நாடுகளுடன் பேசக்கூடியவர்களாக முன்வைத்தார்கள். ஒவ்வொரு தேர்தலின் பின்னரும், அவர்கள் புதுடில்லிக்கு சென்று ஆசீர்வாதங்களை பெற்றார்கள் அந்த வழி ஊடாகவே அரசியல் தீர்வை கொண்டுவரப்போகின்றோம் என தெரிவித்தார்கள்.

அது நீண்டகாலமாக நீடித்தது ஆனால் இந்த தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இரண்டு விடயங்கள் இடம்பெற்றன - அரசியல் மாற்றத்திற்கான அலை நாட்டை போல வடக்கிலும் காணப்பட்டது இரண்டாவது தமிழ் அரசியல் கட்சிகள் பிளவுபட்டன.

No comments:

Post a Comment