சமூக ஊடக பயன்பாடு குறித்து பாடசாலைகளுக்கு பறந்த சுற்றறிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, November 8, 2024

சமூக ஊடக பயன்பாடு குறித்து பாடசாலைகளுக்கு பறந்த சுற்றறிக்கை

பாடசாலை கல்வி மற்றும் தகவல் தொடர்புக்கு சமூக ஊடக சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பாக கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு இந்த சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கையில், கொவிட்-19 தொற்று பரவலின்போது  மாணவர்கள் தவறவிட்ட கற்றல் வாய்ப்புகளை மீட்டெடுக்க உதவும் வகையில் வட்ஸ்அப், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், மாணவர்கள் இன்னும் குறித்த சமூக ஊடக சாதனங்களை பயன்படுத்தி வருவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து தற்போது அமைச்சகத்திற்கு தகவல் பதிவாகி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து ஆசிரியர்களுக்கும் தொடர்புடைய தரப்பினருக்கும் தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தும்போது குறித்த சுற்றிக்கையின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment