சிஜடிக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 19, 2024

சிஜடிக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையானை நாளை (20) வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு சிஐடியினர் (CID) உத்தரவிட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 நிறுவனத்திற்கு, முன்னாள் செயலாளர் அசாத் மௌலானா வழங்கிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைக்கப்பட்டுள்ளார்.

சனல் 4 காணொளியில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment