தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள் : நேர அட்டவணை வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 12, 2024

தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள் : நேர அட்டவணை வெளியீடு

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

நாளை மறுதினம் வியாழக்கிழமை (14) காலை 06.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு 07 படகு சேவைகள் இடம்பெறவுள்ளன.

அதேபோன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி காலை 06.45 மணி முதல் மலை 04.30 மணி வரையிலும் படகு சேவைகள் இடம்பெறவுள்ளன என நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

அதேவேளை நெடுந்தீவுக்கான வாக்குப் பெட்டிகளை நாளையதினம் புதன்கிழமை படகுகள் மூலம் உத்தியோகத்தர்கள் எடுத்து சென்று, நாளை மறுதினம் வியாழக்கிழமை வாக்களிப்பு நிறைவு பெற்றதும் விமான படையினரின் உலங்கு வானுர்தியில் வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment