கடந்த கால தவறுகளிலிருந்து மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் - டக்ளஸ் தேவானந்தா - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 6, 2024

கடந்த கால தவறுகளிலிருந்து மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் - டக்ளஸ் தேவானந்தா

நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து, சரியான திசைவளி நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை வெற்றி கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால தவறுகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டெழுந்து நிகழ்காலத்தை சிறப்பானதாக உருவாக்கிக் கொள்ள ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை கொண்டுவர அணிதிரள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை பகுதியில் பிரதேச மக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ் தெரிவித்திருந்தார்.

இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இதர தமிழர் அரசியல் தரப்பினர் எவருமே இதுவரை செய்திராத அபிலிருத்திகளையும் மக்களின் நலன்சார் திட்டங்களையும் இணக்க அரசியல் வழிமுறையின் ஊடாக கடந்த கலத்தில் நாம் சாதித்துக் காட்டியுள்ளோம்.

இதேவேளை யுத்தத்தால் முழுமையாக அழிவுற்று இன்று படிப்படியாக மீண்டுவரும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சரியான அரசியல் பிரதிநிதித்துவத்தை இதுவரை காலமும் தேர்வு செய்ய தவறியமையால் தொடர்ந்தும் பல்வேறு அவலங்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் நாளாந்தம் எதிர்நோக்கிய வண்ணம் வாழும் நிலை காணப்படுகின்றது.

உங்கள் அரசியல் தெரிவுகள் தெளிவானதாகவும் மக்கள் நலன் சார்ந்து மக்களுடன் வாழும் தரப்பினராகவும் இருப்பது அவசியமானது.

இந்நிலையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவதற்கான தருணம் ஒன்று மக்களாகிய உங்கள் கரங்களுக்கு மீண்டும் வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சரியானவர்களை நோக்கி நீங்கள் வழங்கவது அவசியமாகும்.

இதேநேரம் கிடைத்துள்ள இந்த சந்தரப்பத்தை தவறவிட்டால் அடுத்த 5 வருடங்களுக்கும் தவறை சொல்லிக் கொண்டு இதே நிலையில்தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

அந்த வகையில் இம்முறை உங்கள் தெரிவுகள் தெளிவானதாகவும் எதிர்கால நோக்கம் கருதியதுமாக இருந்து அந்த மாற்றம் எமது ஈ.பி.டி.பி கட்சியின் பலத்தை வலுப்படுத்துவதாக இருக்குமானால் நீங்கள் எதிர்பார்க்கும் அன்றாடப் பிரச்சினை, அபிவிருத்தி முதல் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு வரை அதனைத்தையும் என்னால் பெற்றுத்தர முடியும். என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment