இலங்கைக்கு 3,500 ஹஜ் கோட்டாக்கள் 88 முகவர்களுக்கு பகிர்ந்தளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2024

இலங்கைக்கு 3,500 ஹஜ் கோட்டாக்கள் 88 முகவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 3,500 ஹஜ் கோட்டாக்கள் 88 ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் மற்றும் நேர்மூகப் பரீட்சை பெறுபேறு ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டே இந்த 3,500 ஹஜ் கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதில் ஆகக்கூடிய 96 புள்ளிக்களைப் பெற்ற ஹஜ் முகவர் நிறுவனத்திற்கு 75 கோட்டாக்களும் ஆகக் குறைந்த 52 புள்ளிகளைப் பெற்ற ஹஜ் முகவர் நிறுவனத்திற்கு 15 ஹஜ் கோட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முதல் ஆறு அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு 75 ஹஜ் கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஏனைய ஹஜ் முகவர்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் ஹஜ் கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment