பாடசாலையில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பெயர் நீக்கம் : பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கமைய நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, October 18, 2024

பாடசாலையில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பெயர் நீக்கம் : பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கமைய நடவடிக்கை

கண்டி, குண்டசாலை பிரிவுக்குட்பட்ட ‘கெஹெலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’ என்ற பெயரை உடனடியாக மாற்றுவதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று அனுமதியளித்துள்ளார்.

பாடசாலைகளில் ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை நீக்குமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, மாகாண கல்வி திணைக்களத்தின் கட்டமைப்பு குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இப்பாடசாலை இனி குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை என அழைக்கப்படும்.

இதேவேளை, மினிபே கல்வி வலயமான தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் பெயரை மாற்றவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment