ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஷிகெரு இஷிபா - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2024

ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஷிகெரு இஷிபா

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா நாட்டின் புதிய பிரதமராக இன்று (01) பொறுப்பேற்றுள்ளார்.

தொடர் மோசடிக் குற்றச்சாட்டுகளால் பிரதமர் புமியோ கிஷிடா பதவி விலகப்போவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். 

எனவே, கடந்த 27ஆம் திகதி ஜப்பானின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி அதன் தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பை நடத்தியது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை 9 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். 

இதில் அவர் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானா டெய்ச்சியுடனான கடுமையாக போட்டியிட்டு, இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பின்னரே கட்சி தலைமைக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.

அத்தோடு, ஜப்பானில் எதிர்வரும் 2025 ஒக்டோபர் அல்லது அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment