மூன்றாவது ஆண்டாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா - News View

About Us

About Us

Breaking

Friday, October 18, 2024

மூன்றாவது ஆண்டாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா

உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களது ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர்.

அவ்வகையில் தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக மெட்டா பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செலவுகளை குறைக்கும் நோக்கில் வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் சில ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்யவுள்ளது.

மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 பேரும் கடந்த ஆண்டு 10,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டில் பணிநீக்கம் செய்யப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை

No comments:

Post a Comment