டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார் விராட் கோலி - News View

About Us

About Us

Breaking

Saturday, October 19, 2024

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார் விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ஓட்டங்களை கடந்த 4ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானத்தில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாளில் கோலி 9,000 ஓட்டங்களை கடந்தார்.

இந்தியர்களில் டெஸ்ட் ஓட்டங்களின் அடிப்படையில் சச்சின் டெண்டுல்கர் (15,921), ராகுல் டிராவிட் (13,265), மற்றும் சுனில் கவாஸ்கர் (10,122) ஆகியோருக்கு அடுத்து தற்போது விராட் கோலி உள்ளார்.

விராட் கோலி தனது 197ஆவது இன்னிங்ஸில் 9,000 ஓட்டங்களை எட்டினார். .

அவரை விட டிராவிட் (176), டெண்டுல்கர் (179), கவாஸ்கர் (192) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் (51), டிராவிட் (36), மற்றும் கவாஸ்கர் (34) ஆகியோருக்குப் பிறகு, இந்தியாவுக்காக நான்காவது அதிக சதங்களை அடித்தவராகவும் விராட் கோலி உள்ளார்.

No comments:

Post a Comment