இறப்பர் துண்டுகள் எனக்கூறி சீனாவுக்கு அனுப்பவிருந்த 8,440 கிலோ கிராம் செம்புக் கம்பி கொண்ட கொள்கலன் ஒன்று இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்கள பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து இந்த ஏற்றுமதி கொள்கலன் கைப்பற்றப்பட்டது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், குறித்த கொள்கலனில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 12000 கிலோ கிராம் இறப்பர் துண்டுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொள்கலனை பரிசோதித்தபோது அதில் 8,440 கிலோ கிராம் செம்புக் கம்பிகள் இருந்தமை தெரியவந்துள்ளதுடன், அதன் பெறுமதி ரூபா. 25 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, சுங்க அதிகாரிகளின் அதிரடி சோதனையால் இலங்கை அரசு இழக்கவிருந்த ரூபா. 75 மில்லியன் வரி தடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment