வானிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள ஆணைக்குழு தயார் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 19, 2024

வானிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள ஆணைக்குழு தயார்

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு காலத்தின்போது எதிர்பாராத வானிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடுமென சந்தேகிக்கப்படும் மாவட்டங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று 20ஆம் திகதி முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை வளிமண்டலவியல் திணைக்களத்திடமிருந்து வானிலை அறிக்கை பெறப்படுமென அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அனர்த்தங்கள் காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை நிர்வகிப்பதற்கான விசேட கூட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இதவேளை, இன்று(20) முதல் எதிர்வரும் (22)ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment